Tuesday, 26 April 2016

என் தேவதை - பூவிதழ்

தேவதைகள் 
சிறகடித்து பறப்பார்களாம் வானில்! 
தேவதையே நீ. 
சிரித்ததால் போதும் 
சிறகில்லாமல் நானும் பறக்கிறேன் 
வானில் !

பள்ளிப் பருவமதில்

தோழமையே.. 
கரை இல்லா ஆனந்தம் 
அதில் சிறு பிரிவுகல்.. 
முழு நேர படிப்பு 
அதில் சில சந்தேகங்கள்.. 
முப் பொழுதும் அடக்கம் 
அதில் ஒருவித குழப்பம்.. 
பாசத்தில் சொட்டும் தென் 
அதில் ஒரு ஊமை குறும்பு.. 
பட்டம் பூச்சியை பரவசம் 
அதில் வேறு அவசரம் .. 
யுகங்களாய் என்னுள் 
என் நினைவுகள் 
என்றும் பசுமரத்தானிகளாய்...

புத்தகம்

இரண்டு உயிர் ஒரு உலகம் 
ஒன்று 
படிப்பவன் 
இரண்டு 
கதையின் கதாபாத்திரம்

வரிகள்

தன் வரிகள் அழிந்தும்.., 
என் வரிகளை அழியாமல் 
பாதுகாத்துக் கொண்டது,,, 
- நோட்டு புத்தகத்தில் என் கவிதை..

அந்திமாலையில்

வானுலக தென்றல் 
வையகம் வருகின்றதோ
நட்சத்திர காற்றாடி வழியாக...

இந்தியா

சமத்துவமான இந்தியா 
சாதிமத பேதம் அற்ற இந்தியா 
சிற்ப்பகலையின் சிறப்பம்சம் இந்தியா 
கலாச்சாரத்தின் கல்விக்கூடம் இந்தியா 
பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொண்ட இந்தியா 
பாரினுள் நல்ல நாடு என பாரதி போற்றிய இந்தியா 
இமயம் முதல் குமரி வரை வேற்றுமைகள் பல இங்கிருந்தாலும் 
இந்தியன் என்ற ஒரு சொல்லில் அனைவரும் இனைவோமே 
இல்லாமையும் இயலாமையும் இல்லாத புதிய பாரதம் படைப்போமே

இலட்சியம்

நாம் எந்த பக்கம் 
திரும்பவேண்டும் என்பதை 
சாலை நிர்ணயிக்கிறது 
ஆனால் 
எங்கு சென்று அடைய வேண்டும் 
என்பதை 
நாமே நிர்ணயிக்கிறோம்

வெற்றி

விட்டுக் கொடுத்தால் வெற்றி
விட்டுக் கொடுக்காவிடில்
தோல்வி.
ந.க.துறைவன்.

சின்ன கிறுக்கல்கள்

மத 
மாற்றங்கள் பிரச்சனையை .... 
தீர்க்காது ....!!! 
மன 
மாற்றங்களே பிரச்சனையை 
தீர்க்கும் ....!!! 


கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

விதி

எந்த அரசியல்வாதியும் 
நம் விரலை இழுத்து 
அவர் சின்னத்தில் 
அழுத்துவதில்லை. 
நம் விதியை நாமே 
முடிவு செய்கிறோம்